கல்முனை நகரில் தொற்று நீக்கல் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடு!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் கிருமி நீக்கும் செயற்பாட்டினை மாநகர சபையின் தீயணைப்புப் படை சுகாதாரப் பிரிவு முன்னெடுத்துள்ளது.
அங்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்பூட்டலும் ஒலிபெருக்கி ஊடாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், மாநகரப் பகுதியின் மத்திய பகுதி, மத்திய பேருந்து நிலையம், அதனைச் சூழவுள்ள கடைத் தொகுதிகளில் வீதி வீதியாக கிருமிகளை நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீபின் வழிநடத்தலில் கோரானா வைரஸ் தொடர்பான அறிவுரைகளைப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக மாநகர சபையில் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமான தகவல்கள், ஆலோசனைகளை பொதுமக்கள் பரிமாறிக்கொள்ள முடியும். இதற்காக குறித்த மத்திய நிலையத்தினால் 0672059999, 0767839995 எனும் தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

