ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான ரூபா 10,000/- பெறுமதியான உலர் உணவுப் பொதி வழங்கி வைப்பு…

வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் சுய தனிமைக்குட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் கண்காணிப்பில் வழங்கி வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 11 குடும்பத்தினை சேர்ந்த 50 பேர் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டே உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேநேரம் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் எந்த தொற்றாளர்களும் அடையாளம் காணப்படாமல் பாதுகாப்புடன் இருக்கும் நிலையில் இங்கு வாழும் மக்கள்; தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பிரதேச செயலாளர் கோரிக்கை விடுப்பதுடன் சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் பிரதேச சபை பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான அறிவுறுத்தல் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.