ஆலையடிவேம்பு
அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினால் மாபெரும் சிரமதானப்பணி….

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலய சுற்றுச்சுழல் பகுதியை துப்பரவு செய்யும் மாபெரும் சிரமதானப்பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினால் இன்றைய தினம் (22.08.2023) நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிரமதானப்பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் திரு.க.சுந்தரலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் சிரமதானப்பணியில் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் அதிகளவான உறுப்பினர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.