இலங்கை
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரத்தில் ராஜிதவிற்கு தொடர்பா?

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணை நடத்தவுள்ளது.
இதற்கமைய, இந்த வார இறுதியில் ராஜித சேனாரத்ன விசாரணைக்காக அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியாகாத போதும், இதனை மெய்ப்பிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் தலைமையக தகவல்கள் அமைந்துள்ளன.
இந்தக் கடத்தல் குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டதாக இருக்கலாமென சந்தேகம் கொண்டுள்ள குற்ற விசாரணைப் பிரிவினர், இந்த விவகாரத்துக்கும் ராஜித சேனாரத்னவுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், சுவிஸ் தூதரக அதிகாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே, முன்னாள் அமைச்சர் ராஜிதவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.