தொழில்நுட்பம்
		
	
	
கூகுளில் சேகரிக்கப்படும் தரவுகள் தொடர்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாற்றம்


கூகுள் தேடல் மற்றும் கூகுள் மேப் தேடல் போன்றவற்றின்போது அவை தொடர்பான தரவுகளை கூகுள் சேமித்து வைத்திருப்பது வழக்கமாகும்.
இவற்றினை நாம் அழிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
எனினும் இத் தரவுகள் இதுவரை தானாக அழியக்கூடிய வசதி தரப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் 18 மாதங்களின் பின்னர் குறித்த தரவுகள் தானாகவே அழியக்கூடிய வசதியினை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
அதேபோன்று குரல்வழி பதிபுகள் மற்றும் யூடியூப் ஹிஸ்ட்ரி என்பன 3 மாதங்களின் பின்னர் தானாகவே அழியக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இதற்கு முன்னரான காலப் பகுதியில் குறித்த தரவுகளை பயனர்கள் தாமாகவே அழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
				 
					


