நாகோர்னோ-கராபாக் மோதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக அஜர்பைஜான் குற்றச்சாட்டு!

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தை அங்கமித்த பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு அஜர்பைஜான் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனை இன்று ஞாயிற்றுக்கிழமை அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆர்மீனியா ஆதரவு படையினரிடம் இருந்த நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய நகரங்களை அசர்பைஜான் படையினர் கைப்பற்றினர்.
இந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் 1994 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மாகாணத்தின் பெரும் பகுதியை ஆர்மீனியா கைப்பற்றியது.
குறித்த மாகாணத்தை மையமாகக் கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், ஆர்மீனியா-அசர்பைஜான் இடையே ரஷ்யா முன்னிலையில் கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போதும் உடன்படிக்கையை மீறியதாக இரு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.