இலங்கை
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (1) அதிபர் கே.வசந்தகோகிலா தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் மாணவர்களுக்கு மதிய நேர உணவும் வழங்கி இன்றைய நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.


