யானைகள் அட்டகாசம்! ஆலையடிவேம்பு பிரதேச வாச்சிக்குடா பிரிவை துவம்சம் செய்த யானைகள்: நிரந்தர தீர்வு கோரி மக்கள்….

-கிரிசாந் மகாதேவன்-
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு வாச்சிக்குடா பகுதியில் தோட்ட நிலங்களுக்குள் கடந்த இரண்டு நாட்களாக இரவு வேலைகளில் உட்புகுந்த யானைகள் அங்கிருந்த பயந்தகு தென்னை, வாழை மரங்கள் மற்றும் தோட்டப்பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.
வாச்சிக்குடா பகுதியை அண்மித்து மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை செய்கையின் அறுவடை முடிவடைந்த நிலையில் போதிய வெளிச்சம் இன்மை மற்றும் மனிதர்கள் நடமாட்டம் இன்மை போன்ற விடையங்களை சாதகமாக கொண்டு இலகுவாக இரவு வேளையில் கிராமத்தினுள் யானைகள் உட்புகுந்து பயந்தகு மரங்கள் மற்றும் தோட்டப்பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இதற்கு உடனடி நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ளாமல் விடுபட்டால் யானைகள் தொடர்ந்தும் இவ்வாறு இரவு வேளையில் வருகை தந்து மரங்கள், மக்களின் பயிர்களை சேதமாக்குவதுடன் நின்று விடாது உயிர் இழப்புக்களும் ஏற்படும் நிலை உருவாகும் என பிரதேச மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் இந்த யானை பிரச்சனையை கருத்தில் கொண்டு உடனடி நிரந்தர தீர்வினை பிரதேச மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மற்றும் நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.