ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய முன் நகர்வுகள் இன்றைய நிலை!

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்படுகின்ற நிலையில்.
ஆலையடிவேம்பு பிரதேச தன்னார்வம் கொண்டவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பவர்களினால் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தும் வகையில் மேற்படி கோரிக்கை அடங்கிய ஆவணத்திற்கு ஜூன் மாதம் முற்பகுதியில் இருந்து 5000 வங்கி வாடிக்கையாளர்களின் கையெழுத்துக்களை அண்ணளவாக இரண்டு மாத முயற்சியில் பலனாக பெற்றுக்கொண்டு மேலும் அடுத்தகட்ட முன்னெடுப்புகளுக்கு பன்முக முனைப்புடன் அயராது செயற்பட்டு வருகின்ற நிலையில்.
மேலும் இது தொடர்பில் பல சமூகப் பற்றாளர்களும் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு ATM இயந்திரத்தினை கொண்டு வருவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இது தொடர்பில் ஜூலை (07) மாத நடுப்பகுதியில் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஷ்பகுமார் (இனிய பாரதி) அவர்களின் முன்னெடுப்புக்கு கவனம் செலுத்தும் முகமாக பிரதமர் அலுவலகத்தினால் இலங்கை வங்கியின் தவிசாளர் அவர்களுக்கு விரைவில் ATM இயந்திரத்தினை ஆலையடிவேம்பு பிரதேத்திற்கு வழங்க வகைசெய்யுமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விடையத்திற்கு வலுச்சேக்கும் முகமாக எமது பிரதேச பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் அவர்களினால் ATM இயந்திரம் தொடர்பான விடயம் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவரின் முன்னெடுப்புக்கு கவனம் செலுத்தும் முகமாக இன்று (06.09.2021) மத்திய வங்கியின் தவிசாளர் சுஜிவ ராஜபக்ச அவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை கடிதம் பிரதமர் அலுவலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல்முனைப்பு வழிமுறைக்கள் மூலமாக முயற்ச்சிகளை மேற்கொள்வது நன்மை பயிர்க்கும் நல்ல விடயம் வரவேற்கவேண்டியது.
ஆனால் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) வேண்டி அயராது முயற்சிகள் மேற்கொண்டவர்கள் மேலும் முயற்சிகள் மேற்கொண்டு வருபவர்கள் மீது தங்கள் சுயநல நோக்கத்துக்காக ஆரோக்கியம் அற்ற முறையில் முயற்ச்சிகளை உதாசீனம் செய்யும் முறையில் பதிவுகளை இடுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாக பார்க்கப்படுகின்றது.
உரிய இயந்திரங்கள் நிலையாக எமது பிரதேச எல்லைக்குள் பொருத்தப்படும்வரை எமது அனைவரினதும் செயற்பாடுகள் ஒற்றுமையானதாக தொடர்ந்திட வேண்டும் இலக்கினை அடைந்திடுவோம் பயன் பெறுவோம்.