இலங்கை
Trending

மேல் மாகாணத்தில் இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி

மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இந்தத் திட்டம் மிக விரைவாக ஆரம்பிக்க முடிந்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அடுத்த சில மாதங்களில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் கையடக்க தொலைபேசிகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக டிஜிட்டல் அமைச்சினால் பொலிஸ் அதிகாரிகளுக்கு பல பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட உள்ளன, மேலும் இந்த செயல்முறை ஓகஸ்ட் 4 ஆம் திகதிக்கு முன்னதாக மேல் மாகாணத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வீதி பாதுகாப்பை அதிகரிக்க விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2025 – 2026 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து அமைச்சினால் தயாரிக்கப்பட்ட 85 அம்ச செயற்றிட்டம் அடங்கிய புத்தகம் இந்த நிகழ்வின் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker