இலங்கை
பொதுமக்கள் மத்தியில் அக்கரைப்பற்றில் தீ அனர்த்த ஒத்திகை செயற்பாடு!

அக்கரைப்பற்று பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று (16.03.2022) காலை வேளையில் தீ அனர்த்தத்தின் போது பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் விளக்கமளிக்கும் அனர்த்த ஒத்திகை ஒன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை, பொலிஸார், இராணுவத்தினர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டினை மேற்கொண்டு இருந்தனர். இவ் தீ அனர்த்த ஒத்திகை விழிப்புணர்வு செயற்பாட்டில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு இருந்தனர்.
இதன்போது தீ அனர்த்தத்தின் போது செயற்படும் விதம் தொடர்பான அனைத்து விடயங்களும் மிகச்சிறந்த முறையில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்முறை மூலம் செய்து காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.