பதவியுயர்வு பெற்றுச்செல்லும் திருமதி. பரிமளவாணி சில்வெஸ்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமை ஆற்றிய சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் திருமதி. பரிமளவாணி சில்வெஸ்டர் அவர்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்கான புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராக (AO/GN) பதவியுயர்வு பெற்று நாளை பதவியேற்கவுள்ளார்.
இவர் கடந்த 1993.03.02 ஆம் திகதியன்று கிராம உத்தியோகத்தராக எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இணைந்து 26 ½ வருடங்கள் சீரிய சேவையாற்றி, கிராம உத்தியோகத்தர் சேவையிலுள்ள சிரேஷ்ட அலுவலர்களை அதிசிறப்பு (Supra) தரத்துக்குப் பதவியுயர்வு வழங்கும் பொருட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டிருந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, 2019.02.24 அன்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சில் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று, குறித்த அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வுடனான நியமனக் கடிதத்துக்கமைவாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலிருந்து இன்றைய நாள் (22.10.2019) கடமையுடன் விடை பெற்று, திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராக (AO/GN) நாளை (23.10.2019) முதல் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
எமது ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு 26 ½ வருடங்கள் சேவையாற்றி பதவியுயர்வு பெற்றுச்செல்லும் சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் திருமதி. பரிமளவாணி சில்வெஸ்டர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் மேலும் மக்களுக்கு சிறந்த சேவைகளையாற்றி இன்று போல் என்றும் நலமாக வாழ இறைவனை பிராத்திக்கின்றோம்.