ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குள் மாடுகள் கட்டாக்காலியாக நடமாட்டம் அதிகரிப்பு! மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கையுடன் மாடுகளும் பறிமுதல்!!!

ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குள் காணப்படுகின்ற பிரதான வீதிகளில் மாடுகளை கட்டாக்காலியாக நடமாட விடுவதினால் வீதிகளில் போக்குவரத்து செய்யும் பொது மக்களுக்கு விபத்துக்கள் ஏற்படுவதுடன், பொது மக்களின் வளவுகளிலுள்ள பெறுமதியான பயிர்களுக்கும் சேதத்தினை ஏற்படுத்தி வருவதனையும் அண்மைக்காலமாக காணக்கூடியதாக இருந்துவருகின்ற நிலையில்.
இது தொடர்பான முறைப்பாடுகள் ஆலையடிவேம்பு பிரதேச பொது மக்களிடமிருந்து ஆலையடிவேம்பு பிரதேச சபையினருக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பட்டுவந்த நிலையில்.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள மாடு வளர்ப்பு உரிமையாளர்கள் தங்களது மாடுகளை பிரதான வீதிகளில் கட்டாக்காலியாக நடமாட விடுவதனால் பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடியதாக அமைகின்றது ஆகவே, வீதிகளில் கட்டாக்காலியாக நடமாடும் மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை தங்களது கட்டுப்பாட்டினுள் வைத்து பராமரித்து வளர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.
மேலும் 2023.04.10 ஆம் திகதிக்குப் பின் வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் காணப்பட்டால் அம்மாடுகளின் உரிமையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மாடுகளும் பறிமுதல் செய்யப்படும் என்பதனை ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திரு.R.சுரேஷ்ராம் அவர்கள் மக்களுக்கு அறியத்தருகின்றார்.