விளையாட்டு
பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டியில் இலங்கை மாணவன் புதிய சாதனை!

பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டியில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் நவோத் பரணவிதான 409 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்திற்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் போதே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த மாணவனின் சாதனை தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.