அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட புளியம்பத்தை கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டே செல்வதாக மக்கள் குமுறல்! (படங்கள் இணைப்பு )

-அபிராஜ்,கிஷோர்-
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட இயற்கை சூழலுடன் காணப்படும் அழகிய சிறிய கிராமமே புளியம்பத்தை கிராமம் இங்கு சுமார் 45 குடும்பங்கள் வசித்துவருகின்ற போதிலும் இவ் மக்களுக்கான தேவைகளோ மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
அந்த வகையில் புளியம்பத்தை கிராம மக்கள் அவர்கள் பிரச்சனைகள் பற்றி கூறிய விடயங்கள் பின்வருமாறு,
கல்வி
எங்கள் ஊரில் சுமார் 45 குடும்பங்களைக்கொண்ட 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்ற போதிலும் எங்கள் 3 தொடக்கம் 5 வயதை உடைய ஆரம்பப்பாடசாலைக்கு (நேசரி பாடசாலை) செல்லும் பிள்ளைகள் 15 தொடக்கம் 20 பிள்ளைகள் இருக்கின்றார்கள் அவர்களை கல்வி கற்பதற்கு அனுப்புவதட்கோ நேசரி பாடசாலை தற்போது இல்லை.
ஓர் நேசரி பாடசாலை நான்கு வருடங்கள் இயங்கி வந்ததாகவும் கடந்த எட்டு வருடங்களாக இயங்காமல் அவ் கட்டிடம் பாழடைந்த காணப்படுவதுடன் எங்கள் சிறிய பிள்ளைகளுக்கு நேசரி பாடசாலை இல்லை.இந்த நிலையில் ஆரம்பக்கல்வியே இல்லாதநிலையில். முதலாம் தரம் தொடக்கம் பதின்னொரம் தரம்வரை படிக்கின்ற மாணவர்களோ ஓர் குறித்த சிறு பகுதியினர் மேலும் உயர் நிலைக்கல்வி கற்றவர்களோ கற்றுக்கொண்டு இருப்பவர்களோ அரிது.
ஓர் இனமோ அல்லது ஓர் ஊர்மக்களின் கல்வி நிலை தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களின் வேறு வசதிகளோ அவர்களின் அபிவிருத்திகளோ எந்த நிலையில் இருக்கும் என்பது அறிந்ததே அதே போன்று புளியம்பத்தை கிராம மக்களுக்கும் அனைத்து பிரச்சனைகளும் இருக்கின்றது.
அவற்றில் சில, நீர் பிரச்சனை நீர் பிரச்சனையில் உச்சத்தில் இருக்கின்றார்கள் சுமார் 200 பேர் வசிக்கும் கிராமத்திற்கு ஒரு நாளைக்கு அண்ணளவாக (200×140) 28,000 லீட்டர் நீர் தேவையும் கிழமைக்கான நீர் தேவை (28,000×7) 196,000 லீட்டர் ஆக காணப்படுகின்ற போதிலும் கிழமைக்கு இருதரம் 5000 லீட்டர் படி மொத்தமாக கிழமைக்கு 10,000 லீட்டர் நீரே ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் கிடைக்கின்றது என மக்கள் வருத்தம்.
மேலும் ஊருக்கென ஓர் ஆலயம் இருக்கின்ற போதிலும் புனர்நிர்மாணம் செய்து கொள்ளமுடியாத நிலை, மக்களுக்கான மலசலகூடங்கள் இல்லை,போதிய அளவு வாழ்வாதார உதவிகள் கிடைப்பதில்லை , எங்களுக்காக நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் எங்களை கண்டுகொள்வது இல்லை இவ்வாறு சென்றுகொண்டு இருந்தால் புளியம்பத்தை கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய்விடும் என பல அவர்களின் தேவை மற்றும் குறைகளை கூறியிருந்தார்கள்.
இதனுடன் தொடர்புபட்ட அரசஅதிகாரிகள் உங்கள் கடமைகளை சரியாகவும் உங்களால் இயன்ற உதவிகளையும் அடிப்படைத்தேவை உடைய இவ் புளியம்பத்தை கிராமமக்களுக்கு வழங்குமாறு உங்கள் கவனத்திட்கு அறியத்தருகின்றோம்.
மேலும் தனியார் நிறுவனங்கள்,அமைப்புகள், தனிநபர்கள் உங்களால் இயன்ற உதவிகளை பல தேவைகள் உடைய இவ் கிராமத்திற்கு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.