இலங்கை
		
	
	
முன்பள்ளிகள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி!

முன்பள்ளிகள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த தேசிய கொள்கை, பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வற்காக கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு தொடர்பான படையணியின் தலைவர் பேராசிரியர் உபாலி சேதர தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி தேசிய கொள்கை தொடர்பான ஆலோசனைகளை கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் அல்லது கல்வி மறுசீரமைப்பு தொடர்பான படையணிக்கு அறிவிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
முன்பள்ளி மாணவர்களுக்கான கல்வி தரப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
 
				 
					


