இலங்கை
முட்டை விலை தொடர்பான அப்டேட்!

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை உயரும் என்ற கூற்றுகளை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது.
முட்டையின் விலை 70 ரூபாவாக உயர்த்தப்பட்டாலும், முட்டைகள் 45 ரூபாவிற்கும் குறைவான விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்தியாளர் விலையை நிர்ணயித்த பின்னர், இடைத்தரகர்கள் தங்கள் சொந்த இலாபத்திற்காக விலையை நிர்ணயம் செய்கிறார்கள், இதனால் நுகர்வோர் மற்றும் பண்னையாளர்கள் குழப்பமடைகிறார்கள் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.



