ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் தெரிவு செய்யப்பட 100 குடும்பங்களுக்கு 3,500/- பெறுமதியான பொங்கல் பொதி வழங்கிவைப்பு….

உழவர்களின் திருநாள் தை திருநாள் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகின்ற நிலையில் 2023ம் வருடத்தின் தை திருநாள் பண்டிகை எதிர் வருகின்ற 15ம் திகதி கொண்டாடப்பட இருக்கின்றது.
இவ்வாறு இருக்கையில் தை திருநாள் பண்டிகையை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச தெரிவு செய்யப்பட 100 குடும்பங்களுக்கு 3,500/- பெறுமதியான பொங்கல் பொதி வழங்கும் முன்மாதிரியான செயற்பாடு இன்று (12) வியாழக்கிழமை மாலை 03.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இன் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் இடம்பெற்றதுடன் குறித்த பொங்கல் பொதி வழங்கும் செயத்திட்டத்திற்கு நேர்வே நாட்டை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பா அன்பர் ஒருவர் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தினர் ஆகியவர்களின் அனுசரணையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் மேலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தர் K.பரிமலவாணி அவர்கள் மற்றும் பொதிகளை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.