இலங்கை
மின் வெட்டு கால எல்லை அதிகரிப்பு!

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளைய தினம் தளர்த்தப்படாவிட்டால் மின் வெட்டு மூன்று மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்..
அவ்வாறின்றி ஊரடங்கு உத்தரவு நாளைய தினம் தளர்த்தப்பட்டால் மின் வெட்டு காலப்பகுதி 5 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதிக மின் தேவை காரணமாக இவ்வாறு மின் வெட்டு காலப்பகுதி அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.