பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 14 பாடசாலைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைப்பு…


பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மத்தியமுகாம் கண்ணகி வித்தியாலயம், சிறி முருகன் தமிழ் வித்தியாலயம், அகத்தியர் வித்தியாலயம், வேம்படித்தோட்டம் வாணி வித்தியாலயம், சிறி நாவலர் வித்தியாலயம், சீர்பாததேவி வித்தியாலயம், வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, மல்வத்தை விபுலானந்த வித்தியாலயம், வேம்படி கலைமகள் வித்தியாலயம், புதுநகர் அரசினர் வித்தியாலயம், அன்னமலை சிறி சக்தி வித்தியாலயம், சன்முக வித்தியாலயம், வீரமுனை இராம கிருஷ்ண வித்தியாலயம், சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பிந்தங்கிய 14 பாடசாலைகளுக்குத் தேவையான அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒவ்வொரு பாடசாலைக்கும் ரூபா 15000/- பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது. இளைஞர் சேவை அதிகாரி பைசால் அமீன் அவர்கள் விசேட அதிதியாக கலந்துகொண்டு சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்குரிய பொருட்களை வழங்கி வைத்தார். இதனை New Sun Star Youth Club ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு யோகாக் கலையை உணர்த்த, பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் மற்றுமொரு சேவையே “அறிவொளி வளையம்” என்பது குறிப்பிடத்தக்கது.








