மாணவன் பலி! தம்பிலுவில் பகுதி பாடசாலை சம்பவம்: சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று…

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 08ஆம் தரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் விளைவாக மாணவன் ஒருவர் நேற்றய தினம் (08) பரிதாபமாக உயிரிழந்தார்.
இச் சம்பவத்தினை தொடர்ந்து இன்றைய தினம் (09) சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது என கூறப்பட்டு பாடசாலை அதிபர் மற்றும் சில ஆசிரியர்கள், நிர்வாகத்திற்கு எதிராக தம்பிவில் தேசிய பாடசாலை முன்றலில் சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.
மேலும் அவ் இடத்திற்கு வருகைதந்த வலயக்கல்வி பணிமனையின் பணிப்பாளரிடம் கவனயீர்ப்பு போராட்டகாரர்களால் மகஜர் ஒன்றும் கையளித்தனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு வருகைதந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் அவ் போராட்டக்கள கூடாரத்தில் இருந்த பெற்றோரிடம் தகவலை கேட்டறிந்து இதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜே.கே.யதுர்ஷன்