ஆலையடிவேம்பு
மாகாண மட்ட விளையாட்டு விழாவில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவி டில்ருக்சனி தங்கப்பதக்கம் வென்று சாதனை!

கிழக்கு மாகாண மாகாண மட்ட விளையாட்டு விழாவில் அம்மன் மகளிர் இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு ஆலையடிவேம்பு கோட்ட பாடசாலை கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் மாணவி செல்வி.வி.டில்ருக்சனி 20 வயதிற்குட்பட்ட 400M ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை.
தங்கப்பதக்கம் வென்ற மாணவி செல்வி.வி.டில்ருக்சனி அவருக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் திரு.M.சண்டேஸ்வரன் அவர்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றார்.
மேலும் சாதனை மாணவி செல்வி.வி.டில்ருக்சனி அவருக்கும் மற்றும் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய பாடசாலை சமூகத்திற்கும் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் தங்கள் மகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார்கள்.