மாகாண மட்ட மெய்வல்லுனர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற செல்வி.வி.டில்ருக்சனிக்கான கெளரவிப்பு நிகழ்வு.

அம்மன் மகளிர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் மாணவி செல்வி.வி.டில்ருக்சனி 20 வயதிற்குட்பட்ட 400M மெய்வல்லுனர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று அவரது பாடசாலைக்கும், அம்மன் இல்லத்திற்கும், அவரது கிராமமான தேவகிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதன்படி அவ்மாணவியை கெளரவித்து பாராட்டும் நிகழ்வு அம்மன் மகளிர் இல்லத்தில் முகாமையாளர் திருமதி.மா.குமுதினி தலைமையில் இன்று (12) புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று சிறுவர் நன்னடத்தை திணைக்கள பொறுப்பதிகாரி திரு.கே.ஜெகதாஸ், பாடசாலை அதிபர்.திரு.மு.சண்டேஸ்வரன், நிறுவன பணிப்பாளர் திரு.வே.வாமதேவன், சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.பி.சிறிதரன், திரு.ஏ.அரிகரன், பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் திரு.டி.தினேஸ்ராஜ் , திருமதி.எஸ்.செல்வகுமார் போன்றோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவிக்கு துவிச்சக்கர வண்டி, பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் பாடசாலைக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டு இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.