ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலய பாடசாலைக்கு சண்முகராஜா ராஜேந்திரன் அவர்களின் water Dispenser (நீர் குளிருட்டி) உதவி….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை கடந்த (04/05/2022) அன்று பாடசாலையின் அதிபர் A.நல்லதம்பி அவர்கள் தலைமையில் அதிதிகள் பங்குபற்றலுடன் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு இருந்தது.
குறித்த பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு 1976 நண்பர்கள் குழாம் தங்களால் ஆன பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கி இருந்தார்கள்.
இவற்றினை சமூக ஊடகங்கள் மூலமாக கண்ணுற்று தாமாக உந்தப்பட்ட சண்முகராஜா ராஜேந்திரன் அவர்கள் தாமாகவே முன்வந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அதிக வெப்பமான சூழலில் அமையப்பெற்ற புளியம்பத்தை கலைவாணி கனீஷ்ட வித்தியாலயத்திற்கு வழங்கவென ஒரு water Dispenser (நீர் குளிருட்டி) கொள்வனவு செய்து 1976 நண்பர்கள் குழாம் ஊடாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்திற்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சியும் திருப்தியும் அடைகின்றார்.
water Dispenser (நீர் குளிருட்டி) இன்று 1976 நண்பர்கள் குழாத்திற்கு கிடைத்ததாகவும் மிக விரைவில் அதனை உரிய பாடசாலைக்கு கையளிக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்கள் .
மேலும் உரிய தயார்படுத்தல்கள் செய்யப்பட்டபின் உரியமுறையில் water Dispenser (நீர் குளிருட்டி) கையளிக்க உள்ளதாக 1976 நண்பர்கள் குழாத்தின் மனோகரராஜா லக்ஷ்மிகாந்த் அவர்கள் எம்மிடம் உறுதிப்படுத்தினார்.
இப் பாடசாலையானது புளியம்பத்தை கிராம மற்றும் அதனை அண்டிய மகாசக்தி கிராம, கவடாப்பிட்டி கிராம ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு ஓர் சிறந்த வரப்பிரசாதமாக அமைய இருக்கின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.