இலங்கைவிளையாட்டு
மஹேல ஜயவர்தனவின் காரசாரமான பதிவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, பிரதி சபாநாயகர் பதவி குறித்து தனது கவலையை தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முகங்கொடுத்து பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் இருமுறை பதவி விலகியமை நாட்டின் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதாக அவர் கூறுகிறார்.
இப்படி இருந்தால், பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருக்க வேண்டும் என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.