மத்திய பொலிஸ் படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா!-128 பேர் உயிரிழப்பு

மத்திய பொலிஸ் படைகளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 128 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது, எல்லை பாதுகாப்பு படையில் 10 ஆயிரத்து 636 பேருக்கும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் 10 ஆயிரத்து 602பேருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் 6,466 பேருக்கும் இந்திய திபெத் பொலிஸ் படையில் 3,845பேருக்கும் சாஷத்ர சீமாபால் படையில் 3,684பேருக்கும் தேசிய பேரிடர் மீட்பு படையில் 514 பேருக்கும் தேசிய பாதுகாப்பு படையில் 250 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றில் பாதித்தவர்களில் சிகிச்சை பலனின்றி 128 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் பொலிஸ் படையில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஏனைய படைகளில் எல்லை பாதுகாப்பு படையில் 29 பேர், மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் 28 பேர், இந்திய திபெத் பொலிஸ் படையிலும், சாஷத்ர சீமாபால் படையிலும் தலா 9பேர், தேசிய பேரிடர் மீட்பு படையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு மத்திய பொலிஸ் படையினர் 6,646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.