திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் வருடாந்த திருவிழா…

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் கடந்த (05/20) வருடாந்த 2022 ஆம் ஆண்டுகான சூசையப்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பூசை நிகழ்வுகளுடன் (05/27) சுற்று பிரகார வீதி உலா இடம்பெற்று, அதனை தொடர்ந்து இன்றைய தினம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னைய்யா ஜோசப் ஆண்டை தலைமையில் ஞாயிறு விசேட பூசையும் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுத்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன் இன்றைய தினம் இவ் ஆண்டுக்கான திருவிழா இடம் பெற்றது.
இவ் நிகழ்வில் மட்டு மறை மாவட்ட ஆயர் பொன்னைய்யா ஜோசப் மற்றும் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை (பாதர்) அன்ரனி டிலிமா மற்றும் பொத்துவில் அந்தோனியர் ஆலய பங்கு தந்தை மற்றும் அக்கரைபற்று ஆரோக்கிய அன்னை மாதா ஆலய பங்கு தந்தை மற்றம் அருள்ச் சகோதர்கள்,பொது மக்கள் என்று பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அத்துடன் திருப்பலி உன்னத ஆராதனையும் ,திருச்சுருப்பவனியும் ,மறைமாவட்ட ஆயரின் ஆயத்துவ திருநிலைப்படுத்தப்பட்டு 15வது ஆண்டின் நிறைவு கொண்டாட்டமும் இடம்பெற்றது.
ஜே.கே.யதுர்ஷன்