ஆலையடிவேம்பு பிரதேச அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான தைப்பூசத் திருவிழா நாளை!

ஆலையடிவேம்பு பிரதேச அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான தைப்பூசத் திருவிழா – 2021 நிகழ்வு நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் தை மாதம் 15ம் (28.01.2021) திகதி வியாழக்கிழமை அதாவது நாளைய தினம் பூச நட்சத்திரமும் அமிர்தசித்த யோகமும் பௌர்ணமித்திதியுடன் கூடிய சுபநன்நாளில் எம்பெருமான் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருவிழா நடைபெற இறைவன் திருவருள் கூடியுள்ளது.
அன்றையதினம் அதாவது நாளைய தினம் பிற்பகல் 3.00 மணியளவில் ஆலயத்தில் ஸ்நபனாபிஷேகம், திரவிய அபிஷேகம் இடம்பெற்று அலங்கார உற்சவம், வேதபாராயணம் நடைபெற்று எம்பெருமான் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் சுவாமி உள்வீதி வலம் வந்து பக்த அடியார்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலிப்பார்.
தைப்பூச சிறப்புக்கள்
* இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்திலே நடராஜப் பெருமானை நேருக்கு நேர்
தரிசிக்கும் பேரைப் பெற்ற நாள் இன்நாள்
* சிதம்பரத்திலே நடராஜர் உமாதேவியுடன் ஆனந்த தாண்டவம் ஆடி பக்தர்களுக்கு
தரிசனம் அளித்தநாள் இன்நாள்
* தேவர்களின் குருவான பிரகஸ்பதி என்னும் குரு பகவானின் நட்சத்திரம் பூசம் ஆகும்.
* முருகப்பெருமான் தைப்பூசநாளில் தான் வள்ளியை மணம்புரிந்து கொண்டர்.
* பார்வதி தேவியார் தன்சக்தி, ஆற்றல் அனைத்தையும் ஒன்று திரட்டி வேலாகமாற்றி
அளித்த நாள் இன்நாள்
* இந்த நாளில்தான் முதன் முதலில் நீரும் அதிலிருந்து உலகமும் உயிரினங்களும்
தோன்றியது.
* பாம்பு கடித்து இறந்த பூம்பாவை என்னும் பெண்ணின்(அஸ்தி) சாம்பலிருந்து அப்
பெண்ணை உயிருடன் எழுந்துவரும்படி பதிகம் திருஞானசம்பந்தர் பாடி உயிர்ப்பித்தநாள்
இன்னாளில்தான் சப்தகன்னியர்களுக்கு ஈசன் காட்சி அளித்த நாள் இன்நாள்
*தைப்பூசநன்நாளில் சூரியனின் ஏழாம்பார்வை சந்திரனுடைய வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம்பாவை சூரியனின் மகர வீட்டிலும் படும் போது ஆத்மபலம், மனோபலம் ஆகியவை கிடைக்கப்பெறும் இன்நாள்
முருகப்பெருமான் வள்ளியை திருமணம் பரிந்ததால் கோபம் கொண்ட தெய்வானையை சமாதானப்படுத்தி வள்ளி தெய்வானை சமேதராக காட்சி அளித்த திருநாள்
காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி தவம் இருந்து நாராயணப் பெருமானை
கண்டு கழித்த நாள் இன்நாள்
* வஜன்,வரகுணபாண்டிய மன்னர்கள் தங்களுடைய பாவம் தீர்ப்பெற்று வரத்தைப் பெற்றுக் கொண்ட நாள் இன்நாள்
” பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது” ஆகவே அன்றைய தினம் பழஞ்சோறு, பழையகறி வகைகளை உண்பதை தவிர்க்கவேண்டும்.