கொரோனா பரவும் அபாயம் – PHI அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கை

மேல் மாகாணத்தினுள் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் காரணத்தினால் புது வருட காலத்தில் மாவட்ட எல்லையை கடப்பதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பணிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மூன்று குழுக்கள் ஆபத்தான விபத்தில் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதை அவதானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுள் முதலாவதாக மேல் மாகாணத்தில் கடமையாற்றும் வேறு மாவட்ட ஊழியர்கள் எனவும் அவர்கள் இப்போதே அவர்களுது வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக வேறு பகுதிகளில் இருந்து மேல் மாகாணத்திற்கு பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள வருபவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மூன்றாவதாக மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் தற்போது வேறு பகுதிகளுக்கு சுற்றுலாக்களை மேற்கொள்வதன் ஊடாகவும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.