கல்வியில் திறமையான இரண்டு மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் பங்களிப்பு…

அக்கரைபற்று கோளாவில் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை அதிகரிக்க கடந்த வாரம் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையம் அமைப்பினால் நேரடியாக கல்வியில் திறமையான இரண்டு மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வி ஊக்குவிப்பு உபகரணங்கள் கையளிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் தனியார் வகுப்புக்கான வருடாந்த கொடுப்பனவும் நேரடியாக வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது கோளாவில் மக்கள் அபிவிருத்தி மைய அமைப்பின் உறுப்பினர் திரு.சுதாகரன் அவர்களின் தலைமையில் திரு.டிலூ, திரு.டினோஸ்காந்,திரு.தரனிதரன் அவர்களும் சென்று மாணவர்கள் ஆனா விமலகாந், திஸ்மிதன் ஆகியோருக்கு இந்த கல்வி ஊக்குவிப்பு உபகரணங்களும்,கொடுப்பனவும் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்துவரும் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மைய அமைப்பிற்கும் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும் எமது ஆலையடிவேம்புவெப் இணையக்குழு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் மேலும் அவர்களின் நல்ல எண்ணம் சிறப்படைய வாழ்த்துக்கள் .