அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்களுக்கு தேவர்கிராம தேவாலய பங்குத்தந்தை மற்றும் தேவர்கிராம பிரதேச மக்களினால் சேவை நலன் பாராட்டு விழா….


ஆலையடிவேம்பு பிரதேச தேவர்கிராம திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்கள் கடந்த 08 வருடங்களாக அதிபராக திறன்பட கடமையாற்றி இடமாற்றம் பெற்று கோளாவில் திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக கடந்த (13.01.2023) அன்று கடமையை பொறுப்பேற்று இருந்தார்.
அந்த வகையில் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தேவர்கிராம திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தின் 08 வருடகால சேவையை பாராட்டி சேவை நலன் பாராட்டு விழா ஆலையடிவேம்பு பிரதேச தேவர்கிராம தேவாலயத்தில் இன்றைய தினம் (22/01/2023) ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் இடம்பெற்றது.
இன் சேவை நலன் பாராட்டு நிகழ்வு தேவர்கிராம தேவாலய பங்குத்தந்தை, அருட்சகோதரர்கள் மற்றும் பிரதேச மக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றதுடன் பிரதேச மக்களினால் பூ மாலை அணிவித்து ஆராத்தி என்பன எடுக்கப்பட்டு வரவேற்பு நடனம் என்பனவற்றுடன் கோலாகலமாக வரவேற்கப்பட்டதுடன் மேலும் பங்குத்தந்தை மற்றும் அருள் சகோதரர் அவர்களால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம், பரிசில்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நிகழ்வில் பழைய மாணவர்கள் சார்பாக, பிரதேச மக்கள் சார்பாக மற்றும் தேவாலய பங்குத்தந்தை அவர்களினால் அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்களின் 08 வருடகால சேவையின் முக்கியத்துவம் அவரின் ஆளுமை மிக்க செயற்பாடுகள், பாடசாலையின் அபிவிருத்திக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் என வாழ்த்தி உரைகள் இடம்பெற்றதுடன் கலாச்சார நிகழ்வுகள், அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன் அவர்களின் உரை என்பதும் இடம்பெற்றது.
நிகழ்வில் தேவர்கிராம தேவாலய பங்குத்தந்தை, அருட்சகோதரர்கள், தேவர்கிராம மக்கள் , திகோ/புனித சவேரியார் வித்தியாலய தற்போதைய அதிபர் திருமதி.செல்வி, பாடசாலை மாணவர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் என்பவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

















