இலங்கை
Trending

மத்தியகிழக்கு மோதல் நிலைமை : இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பாக முற்கூட்டிய தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, மத்தியகிழக்கு போர்ச்சூழல் தொடர்பாக ஆராய்ந்து, தாக்கங்கள் ஏற்படக்கூடிய துறைகள், தாக்கத்தின் அளவு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வு செய்து, அமைச்சரவைக்கு சந்தர்ப்பத்திற்கேற்ப பொருத்தமான விதந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பெருந்தோட்டத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த விதயாரத்ன , வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க , வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோர் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker