மதி பாடும் நதிகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா

ஜே.கே.யதுர்ஷன்
அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை பி.எம்.கலிலுர் றகுமத்துல்லாஹ் ஈழமதி ஜப்பர் அவர்களின் கலை இலக்கிய பிரவேசத்தின் மதி பாடும் நதிகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றய தினம் (06/03/2021) அட்டாளச்சேனை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான A.L.M.அதாஉல்லா கலந்து சிறப்பித்தார் மேலும் இன் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள்,மற்றும் சட்டத்தரணிகள், நலன் விரும்பிகள் ,பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நூலாசிரியர் ஈழமதி ஜப்பார் பி.எம்.கலிலூர் றகுமத்துல்லாஹ்-JP அவர்கள் பாலமுனை பகுதியில் 1959,10,28 இல் பைக்கீர் முகையதீன் பாவா மற்றும் ஆசியா உம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார் இவரது இலக்கிய பெயர் ஈழமதி ஜப்பார் இவர் பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண தரத்தை கற்றார் .மேலும் நிந்தவூர் அல்- அஷ்ரக் மகா வித்தியாலயத்தில் இவரது மேலதிக கல்வியை கற்றார் மேலும் இவர் எம்.சி.மதீனா அவர்களை வாழ்க்கை துனைவியாக ஆக்கிகொண்ட ஈழமதி ஜப்பார் அவர்கள் சிரேஷ்ர ஊடகவியலாளராகவும் அரச பொது முகாமைத்துவ உதவியாளராக 34 வருடங்கள் கடமை ஆற்றி தனது 57வயத்தில் ஓய்வு பெற்றார் மேலும் இவர் தமிழ் ,ஆங்கிலம் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.
இவரது கலை இலக்கிய பிரவேசமானது 1978 ஆண்டு இவரது முதல் கலை இலக்கிய பிரவேசக்கவிதை வா எந்தனருகினிலே எனும் கவிதை இவரது முதல் கவிதையாகும்.