மட்டு அம்பாறை தமிழ் அறிவர்கள் சங்கத்தின் 3ஆவது இந்திரவிழா இன்று….

மட்டு அம்பாறை தமிழ் அறிவர்கள் சங்கத்திரின் 3ஆவது விழாவும் இந்திரவிழாவும் இன்றைய தினம் (2023/05/06) திருக்கோவில் 04 பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழ் அறிவர்கள் தலைமையகத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றுது.
இன் நிகழ்வானது திரு.கு.குமாரதாசன் தாபகர் பிரதான ஆசான் தமிழ் அறிவர்கள் சங்கம் அவர்களின் தலைமையிலும் சிவஸ்ரீ இரா.ஜெகதீஸ்வர சர்மா அவர்களின் முன்னிலையிலும் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மங்கள விளகேற்றல் தேவாரம் இசைத்தல் இந்து சமய கொடி ஏற்றுதல் மற்றும் ஜோகா தண்டாவீச்சு தற்காப்பு கலை பயிற்சி நெறிகளும் இடம் பெற்றதுடன் சிவஸ்ரீ இரா.ஜெகதீஸ்வர சர்மா அவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.
மேலும் யோகா கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் கௌரவிப்பு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுது. மற்றும் கலைநூட்பகலைஞர்களின் நேர்காணல் நிகழ்வும் சேவையாளர்கள் தொழிநூட்பவியலாளர்கள் கௌரவிப்பும் இடம் பெற்று குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் பிரதம மற்றும விசேட சிறப்பு அதிதிகளாக திரு.கு.ஜெயராஜ் இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோத்தர் மாவட்ட செயலகம் அம்பாறை மற்றும் திரு.கண.இராஜரெத்தினம் திருநாவுகரசு நாயனார் குருகுல ஆதினம் , திரு.வ.மதனசீலன் கலாச்சார அபிவிருத்தி உத்தியோத்தர் திருக்கோவில் பிரதேச செயலகம் , திரு.வி.விமலேஸ்வரன் அதிபர் சத்திவித்தியாலயம் விநாயகபுரம்,திருமதி.முகுந்தினி சுரேந்திரன் நடன ஆசிரியர் சக்திவித்தியாலயம் விநாயகபுரம் ஆகியோர் இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்