ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஹர்த்தாலையடுத்து பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஹர்த்தாலையடுத்து பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஹர்த்தாலையடுத்து இன்றைய தினம் (25) பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
அதே சமயம் அருகாமையும் உள்ள அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வழமை போன்று நாளாந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருவதனையும் அவதானிக்க கூறியதாக இருந்தது.
புதிய உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு இன்று அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து இன்று வடக்கு கிழக்கு பெரும்பாலான பிரதேசங்களில் வர்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காததையடுத்து பாடசாலைகள் முடங்கியுள்ளன. போக்குவரத்தும் இடம்பெறாததையடுத்து வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து செயற்பாடுகளும் முற்றாக முடங்கி உள்ளதாக அறியக்கிடைக்கின்றது.