இலங்கை
மட்டக்களப்பு வான்பரப்பில் மர்மப்பொருள் – அச்சத்தில் மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதானிக்க முடிகின்றது.
குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.