உலகம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 29,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 29,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு, வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 2,341 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, அமெரிக்காவையே தடம்புரட்டியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,659ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில்; 8,48, 717 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 84050 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால், தற்போதைய நிலவரப்படி, 26,35,719 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் இதுவரை 1,84,066 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.