தேவகிராமத்திற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தேவகிராம (அளிக்கம்பை) மக்கள் சுத்தமான குடிநீருக்காக பரிதவிக்கும் நிலையினை கருத்திற்கொண்டு அங்குள்ள பொதுக்கிணற்று நீர் வளத்தை பயன்படுத்தி அதனை சுத்திகரிப்பு செய்து தொடர்ச்சியாக வழங்கும் நோக்கிலான மணித்தியாலயத்திற்கு 500 லீற்றர் நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றும் இயந்திரத் தொகுதியை பொருத்துவதற்கான நிலையப் பணிகள் இன்றைய தினம் (29.11.2021) சிவன் அருள் பவுண்டேசனால் அமரர். சற்குணநாதன் மங்களேஸ்வரி அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது மகன் இலண்டனில் வசிக்கும் திரு.ச.யோகரெட்ணம் அவர்களின் ரூபா எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் நிதி அனுசரணையில் இச்செயற்றிட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்தொடக்க நிகழ்வில் அருட்தந்தை ஏ.ஜே.அருள்ராஜா அவர்களும் சிவன் அருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.