பிபிலை ஸ்ரீ/வாணி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…….

இணைந்த கரங்கள் அமைப்பினால் மொ/ஸ்ரீ/வாணி தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணி வழங்கும் நிகழ்வானது இன்று 26/11/2022 காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. மாரிமுத்து சந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான தொழிலான றப்பர் தொழிலையே பிரதான தொழிலாகவும் ஏனையோர் வெளிநாடுகளுக்கு தனது குடும்ப கஸ்ரத்தினால் வேலைகளுக்காக பிள்ளைகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் அதனால் மாணவர்கள் தங்களது குடும்பங்களை சுமக்கவேண்டி ஏற்படுகின்றது இதனால் பாடசாலையை விட்டு இடைவிலகின்றனர்.
இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது கல்வியினை இடை விலகாமல் அவர்களை பாடசாலைக்கு தினமும் சென்று கல்வியை கற்க வேண்டும் என்ற நோக்கத்தையும் வலியையும் உணர்ந்து “ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் மகுட வாசகத்தினை மாணவர்களுக்கிடையில் விதைத்து வைக்கின்றனர்.
மேலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் பாதணி வழங்கும் இன் நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர், பாடசாலையின் ஆசிரியைகளான திருமதி.ப.கலைமகள், சு.கலைச்செல்வி மற்றும் ராஜா. நித்தியகலா, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன்,திரு. எஸ்.காந்தன், திரு. துலக்சன், திரு. நா. சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணைந்த கரங்கள் அமைப்பினரால் மொன்றாகலை பிபில ஸ்ரீ/வாணி தமிழ் வித்தியாலய பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை கல்விகற்கும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் தாய் தந்தையை இழந்த 05 மாணவர்களுக்கு பாதணிகள்,புத்தகப்பைகள் இணைந்த கரங்கள் உறவுகளினால் இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன். திரு.எஸ்.காந்தன், திரு.சி.துலக்சன், திரு.சனாதனன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.