விளையாட்டு
‘Cricket’s Match Fixers’ நிகழ்ச்சி தொடர்பில் ICC யின் தீர்மானம்

கிரிக்கெட் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஔிபரப்பான நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தப்பட்ட 5 பேர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படமாட்டாது என சர்வதேச கிரிக்கட் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
‘Cricket’s Match Fixers’ எனும் குறித்த நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி அல் ஜசீரா தொலைக்காட்சி ஊடாக ஔிபரப்பாகி இருந்தது.
குறித்த நபர்களுக்கு எதிராக போதிய அளவான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய எதிர்பார்க்கவில்லை என சர்வதேச கிரிக்கட் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.