உலகம்
விண்வெளி வீராங்கனைகள் சரித்திர சாதனை!

விண்வெளி வீராங்கனைகள் இருவர் சரித்திர சாதனை படைத்துள்ளனர்.
விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மீர் ஆகிய ஜோடி விண்வெளியில் நடந்த முதல் பெண் ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் மின்சாரம் வழங்கும் சூரிய ஒளித் தகடுகளில் ஏற்பட்ட கோளாறினை சரிசெய்யும் பணியில் இந்தப் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெளியே ஏற்படும் பழுதுகளை இதுவரை ஆண்களே செய்து வந்த நிலையில் குறித்த பெண்கள் இருவரும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.



