மக்கள் குறைகளை கேட்க பாராளுமன்ற உறுப்பினர்கள்: தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரிவிற்கான மக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயம் திறப்பு!!

தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரிவிற்கான மக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயம் நேற்றய தினம் (13) பி.ப 3.00 மணியளவில் அக்கரைப்பற்று சிங்கள பாடசாலை வீதியில் மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் ஒரு தினம் என்ற அடிப்படையில் மக்கள் குறைகளை கேட்கவும் அதற்கான தீர்வுகளை வழங்கவும் மக்களை நாடி அரச தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஒருங்கிணைப்பு காரியாலயத்திற்கு வருகை தரவுள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தை அனைத்து மக்களும் பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளையும் தேவைப்பாடுகளையும் முன்வைத்து பயன் பெற முடியும்.
குறித்த காரியாலயத்தினை திகாமடுல்ல பா.உ மஞ்சுள ரத்நாயக்க மற்றும் பா.உ ஆதாம்பாவா அவர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதியின் இணைப்பாளர் ரவீந்திர குணவர்தன, கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆர். எம். அன்ரன் ஆகியோர்கள் வருகை தந்து திறந்து வைத்திருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரிவுக்கான தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் ரதீசன் ஏற்பாட்டிலும் ஆலையடிவேம்பு பிரிவு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், பொது மக்கள் பங்குபற்றுதலுடனும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.