மகா சக்தி டயகோணியா பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் கண்காட்சி….

ஆலையடிவேம்பு பிரதேச மகா சக்தி டயகோணியா பாலர் பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் சிறுவர் கண்காட்சி நிகழ்வு இன்று (06) காலை பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பெற்றோரின் உதவியுடன் மாணவர்களால் பெரும்பாலும் கழிவு பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கட்டிடங்கள், பல வகையான கைப்பணி பொருட்கள், மாணவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான கருணையம்மா, மேகலா, சிவகலா மற்றும் ரனுஜா ஆகியோரினதும், பெற்றோர்களினதும் ஏற்பாட்டில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சிறுவர் கண்காட்சி நிகழ்விற்கு அதிதிகளாக மகாசக்தி அலுவலகத்தின் முகாமையாளர் திலகராஜன், உப தலைவர் நவரத்தினராஜா, கணக்காளர் புவனேஸ்வரி ஆகியவர்கள் கலந்து சிறப்பித்ததுடன்.
மேலும் பிரதேச மக்கள், பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் வருகைதந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.
மாணவர்களின் ஆக்க திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பாலர் பாடசாலையின் ஆசிரியைகளுடைய வழிகாட்டலில் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் திறமைகளை மிகவும் சிறப்பான முறையில் வெளிக்காட்டும் முகமாக குறித்த கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



