மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விடுகை விழா…..

(செல்வி)
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் 2023 ம் ஆண்டுக்கான முன்பள்ளி மாணவர்களுக்கான விடுகை விழா நேற்று (11) அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கலாசார மண்பத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி ஜோய் காந்திமதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக திரு s. விவேகானந்தராஜா உதவிக்கல்விப்பணிப்பாளர் முன்பள்ளி பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் வலயக்கல்வி அலுவலகம் திருக்கோவில் மற்றும் திரு p.மோகனதாஸ் வெளிக்கள உத்தியோகத்தர் பாலர் பாடசாலை கல்வி பணியகம் திருக்கோவில் திருமதி M.S.M கரீமா முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் ஆலையடிவேம்பு திரு A பரமசிங்கம் தலைவர் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்துக்குட்பட்ட கனகதுர்க்கா பாலர்படசாலை விவேகானந்தா மற்றும் அம்பாள் பாலர்பாடசாலை கனகாம்பிகை மற்றும் வினாயகர் பாடசாலை என 5 பாடசாலை சிறார்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் சிறார்களின் ஆடல் பாடல் நடன நிகழ்வுகளும் முன்பள்ளி சிறார்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.