காணி ஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கும் மற்றும் பயிர் செய்யும் பொது மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில்….

திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட காணி ஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கும் மற்றும் பயிர் செய்யும் பொது மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று (2022.02.17) பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வின் விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான W.D.வீரசிங்க அவர்கள் கலந்துகொண்டு இருந்தார்.
இந் நிகழ்வில் 40 பேருக்கு அளிப்புக்களும் 20 பேருக்கு உத்தரவுப்பத்திரங்களுமாக 60 பயனாளிகளுக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நேற்றய இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமாகிய W.D.வீரசிங்க, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. அனோஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு.மோகனராஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் திரு.கந்தசாமி, சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.சசீந்திரன், காணி உத்தியோகத்தர்களாகிய திரு.P.கோவிந்தசாமி, திருமதி.T.லோஜினி, திரு.N.நந்தகுமார், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.R.ஜெகதீஸ்வரன், திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் திரு. பரமானந்தம்,சமுக சூழல் பாதுகாப்பு உத்தியோத்தர் SP.சீலன் ஆகியோர் கலந்துகொண்டு உத்தரவுப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் திருக்கோவில் பிரதேச செயலகமானது கடந்த 2020 ம் ஆண்டு 800க்கு மேற்பட்ட காணி அளிப்பு பத்திரம் தயாரித்து கிழக்கு மாகாணத்திலே முதலாம் இடத்தினை பெற்றுள்ளமையும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.