போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகள்!

போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகளை வழங்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த கமராக்கள் மூலம் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளால் இடம்பெறும் குற்றச் செயல்களை கண்டறிய முடியும்.
அத்துடன் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்புகளை இந்த கமராக்கள் பதிவு செய்யும்.
இந்த கமராக்கள் மூலம் நாட்டில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றங்களை தடுக்க முடியும்.
போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படும் முரண்பாடுகளை ஆதாரங்களுடன் கண்டறிய முடியும்.
நாடளாவிய ரீதியில் 608 பொலிஸ் நிலையங்கள் உள்ளன. நகர்புற பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகளை முதலில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கமராக்கள் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை கண்காணிக்க மிகவும் உதவும்.
பொலிஸ் அதிகாரிகளால் இடம்பெறும் குற்றச் செயல்கள், சட்டவிரோத கைது நடவடிக்கைகள் தொடர்பில் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கமரா பொருத்தப்பட்ட சீருடைகளை வழங்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.