இலங்கை
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

பல்வேறு காரணங்களினால் பல்வேறு காலப்பகுதியில் காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவ்வாறு காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஒருக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்படுவதாக அவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர், பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.