இலங்கை
பொத்துவில் பிரதேசத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….

கமு/திகோ/ ரொட்டை பொத்துவில்,அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கமு/அக/அல்-மர்வா வித்தியாழையம் ஹீஜ்ரத் நகர் பொத்துவில் ஆகிய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு அப் பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான திரு.கஜரூபன் திரு.சுரேஷ்சி, திருமதி. சுரேஷ், சி.துலக்சன் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.