இலங்கை
மாத்தளையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

மாத்தளை மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்த மூவரில், மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இவர் நிமோனியாவால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த ஏனைய இருவரும், கொழும்பு 10 ஐச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணும் ஆவர்.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 23 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ளதுடன் 8 ஆயிரத்து 845 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதேவேளை 152 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.