பொதுஜன பெரமுன எந்த கூட்டில் வந்தாலும் ஆதரியுங்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் புறக்கணியுங்கள்:பி.எச்.பியசேன

வி.சுகிதாகுமார்
பொதுஜன பெரமுன எந்த கூட்டில் வந்தாலும் ஆதரியுங்கள். அதேநேரம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் புறக்கணியுங்கள் என அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
வியாழக்கிழமை (12) அவரது அக்கரைப்பற்று அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அம்பாரை மாவட்டம் மட்டுமல்லாது வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான முக்கிய தேர்தலாக இத்தேர்தலை பார்க்க வேண்டும். இதேநேரம் தமிழ்த்தேசிய கூட்;டமைப்பை நம்பியே நமது தமிழினம் இன்று பாழ்பட்டு கிடப்பதாகவும் கூறினார்.
ஆகவே இவர்களின் வழியில் தமிழ் மக்கள் செல்லாமல் மகிந்தராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியின் வழியில் சென்று புதிய அரசியில் பாதையில் பயணிக்க வேண்டும் என்றார்.
அம்பாரை மாவட்டத்தின் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்றுவருவதாகவும் கூறினார்.
இதேநேரம் மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மட்டக்களப்பில் கொரோன வைத்தியசாலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனர். இதன் மூலம் அரசாங்கத்திற்கு அவப்பெயரை உருவாக்கலாம் எனவும் ஒரு கும்பல் முயற்சி செய்கின்றனர்.
குறித்த இடம் கொரோன வைரஸ் தொற்றியுள்ளதாக எனும் ஆராயும் பகுதி மட்டுமே என அரசாங்கம் தெளிவாக சொல்லியுள்ளது. ஆகவே மக்கள் வீணாக இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.